என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிராம மக்கள் சாலை மறியல்"
- மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பொது நிலத்தில் தனி நபர் குடிசை அமைத்துள்ளார்.
- ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வீரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பொது நிலத்தில் தனி நபர் குடிசை அமைத்துள்ளார்.
இந்த குடிசை அமைத்தது குறித்து அரசு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- குழிநாவல் - சுண்ணாம்புக்களும் செல்லும் சாலையில் குழிநாவல் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடங்களுடன் அண்ணாமலைச்சேரி - சென்னை செல்லும் அரசு பேருந்தை மடக்கி சாலை மறியல் ஈடுபட்டனர்.
- ஆரம்பாக்கம் போலீசார் மற்றும் வட்டாட்சியர் கண்ணன் அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி சார்பாக இங்கு உள்ள கிராமப்புற மக்கள் குழிநாவல், ஓபசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் ஓபசமுத்திரம் ஊராட்சி குழிநாவல் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கிராமத்தின் சார்பாக புகார்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று குழிநாவல் - சுண்ணாம்புக்களும் செல்லும் சாலையில் குழிநாவல் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடங்களுடன் அண்ணாமலைச்சேரி - சென்னை செல்லும் அரசு பேருந்தை மடக்கி சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதை அறிந்த ஆரம்பாக்கம் போலீசார் மற்றும் வட்டாட்சியர் கண்ணன் அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் எங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர வருவதில்லை, தெரு விளக்கு போடுவதில்லை என குற்றம் சாட்டினர். இது சம்பந்தமாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் வட்டாட்சியர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கஜா புயலினால் தன்னிலப்பாடி மற்றும் நீடுர் பகுதியில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டன. ஆதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி நீடுரில் நேற்று கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் அமுல்ராஜ், தி.மு.க. ஊராட்சி செயலாளரும், மாவட்ட நெசவாளர் அவை துணைத்தலைவருமான குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய தொழிற்சங்க மாவட்ட தலைவர் சித்தார்தன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பாரபட்சமின்றி நிவாரண தொகை வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக பயனாளிகள் பட்டியலை முறையாக கணக்கெடுக்க வேண்டும்.
மரைக்காயர் கட்டளை கிராமத்திற்கு 4 ஆண்டு காலமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும். 2017-2018-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையும், வெள்ள நிவாரண தொகையும் உடனே வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் கொள்முதல் செய்யும் நெல்லுக்குரிய பணத்தை உடனடியாக அவரது வங்கி கணக்கில் ஏற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மறியலில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் அமுதவிஜயரங்கன், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இன்னும் ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள், மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக செம்பியன்மகாதேவி-களத்திடல்கரை மெயின் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பாஸ்கரன், தி.மு.க. அவைத்தலைவர் பழனிவேல், விவசாய தொழிற்சங்க ஒன்றிய துணை தலைவர் வீராச்சாமி உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர், பொட்ட வெளிபகுதியில் உள்ள 3 தெருக்களுக்கு கடந்த 2 மாதமாக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பொட்ட வெளியில் உள்ள பூம்புகார்-கல்லணை சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
அதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வில்லியனூர் அருகே பொறையூர் கிராமத்தில் வள்ளுவன்பேட் பகுதி உள்ளது. இங்கு ஏராளமானோர் குடியிருந்து வருகிறார்கள். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாசு கலந்த குடிநீர் (பழுப்பு நிறத்தில்) வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து மாசு கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட திரண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்கள் புகார் தெரிவித்த குடிநீரை ஆய்வு செய்தனர். அப்போது குடிநீர் மாசு கலந்து இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து பாதுகாப்பான குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் அங்கு செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள புது காலணியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இங்கு குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு பழுதடைந்ததால் கடந்த பல நாட்களாக இங்கு குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினமும் குடிநீருக்காக பல கிலோமீட்டர் நடந்து சென்றுதண்ணீர் எடுத்து வரும் அவல நிலை இருந்து வந்தது
இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கப்படாததால் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் திரளாகக் கூடி பண்ருட்டி சித்தூர் காலையில் அங்கு செட்டிபாளையத்தில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ் போக்குவரத்து பாதித்தது இந்த வழியாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக குடிநீர் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகையாற்றில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் லாரியை சிறைபிடித்து இரவு முழுவதும் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டே இருந்தது.
மேலும் மணல் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இன்று காலை அசுர வேகத்தில் வந்த மணல் லாரி குண்டலப்பட்டி பிரிவு அருகே சாலையோரம் நடந்து சென்ற திருப்பதி மனைவி சாத்தாவு(வயது43) என்ற பெண் மீது பயங்கரமாக மோதியது. படுகாயமடைந்த அவர் மதுரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் அணைப்பட்டி- நிலக்கோட்டை சாலை குண்டலப் பட்டிபிரிவு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற விளாம்பட்டி இன்ஸ் பெக்டர் சுகு மாறன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கிராமமக்கள் சார்பாக 3 கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பகுதியில் தொடர்ந்து வரும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள பா.ஊராலிப்பட்டி ஊராட்சி பூவம்பட்டி கிராமத்தில் கடந்த 3 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்த போது யூனியன் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.
யூனியன் அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று பூவம்பட்டி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வத்தலக்குண்டுவில் இருந்த ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் 1 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்